1. விவாகரத்து:
கீழே உள்ள அடிப்படையில்:
அ) திருமணத்திற்குப் பிறகு அவரது மனைவி அல்லாத வேறொருவருடன் தானே விரும்பி உடலுறவு கொண்டிருக்கிறார் திருமணத்திற்குப் பிறகு, எப்போதேனும் ஒரு முறை விரும்பி உடலுறவு கொண்டிருந்தாலும், அந்த ஒரு சம்பவத்தைக் காட்டியே விவாகரத்து கோரலாம்.
பி) கொடுமை என்பது
1.உடலுக்கு விளைவிக்கப்படும் கொடுமை 2.மனதிற்கு விளைவிக்கப்படும் கொடுமை என இரு வகைப்படும். கணவன் மனைவியை அடித்தால் அது உடலுக்கு செய்யும் கொடுமை எனப்படும். மனைவி மணம் நோகும்படி கணவன் ஏதேனும் செய்தால் அது மனதிற்கு செய்யும் கொடுமை ஆகும். (எ.கா) 1. மனைவி கணவனை ஒரு பொது இடத்தில் இழிவாகப் பேசி அவமானப்படுத்தினாள். தானே தீக்குளித்துக் கொண்டு அவளது கணவனை காவல் துறையினரிடம் சிக்குமாறு செய்யப்போவதாக அச்சுறுத்தினாள். இது கணவரின் மனதிற்கு செய்யும் கொடுமை ஆகும்.
2.கணவன் விபத்தில் சிக்கி பல மாதங்கள் மருத்துவனையில் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வரும் காலத்தில், ஒரு முறையேனும் அவனது மனைவி, மருத்துவ மனை வந்து கணவனை பார்க்காதது. மனதிற்கு செய்யும் கொடுமை ஆகும்.
3.கணவனின் மற்றும அவனது உறவினர்களின் விருப்பத்திற்கு மாறாக மனைவி தானே விரும்பி கருக்கலைப்பு செய்து கொண்டது மனைவி கணவரின் மனதிற்கு செய்யும் கொடுமை ஆகும்.
4.வரதட்சணை கோரிக்கை செய்வதே மனதிற்கு செய்யும் கொடுமை, தம்பதியர்களில் ஒருவர் மற்றொருவருடன் வாழ்வது அபாயகரமானது என்று தோன்றுமளவிற்கு அம்மற்றொருவரின் நடத்தை அமைந்தால் அது கொடுமையின் கீழ் வரும்.
13(i-b) விவாகரத்து மனுச் செய்வதற்கு முன்னதாக தொடர்ச்சியான இரண்டு ஆண்டுகளுக்கு கணவன் மனைவி இருவரில் ஒருவர் இன்னொருவர் கைவிட்டுவிட்டுச் எந்தவித நியாயமான காரணமுமின்றி பிரிந்து சென்றால் பாதிக்கப்பட்டவர் விவாகரத்து கோரலாம்.
(ii)தம்பதிகளில் ஒருவர் வேறொரு மதத்திற்கு மாறிவிட்டதால் இந்துவாக இல்லை என்ற காரணத்தினால் மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.
(iii)தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அல்லது குணமாக்கமுடியாத பத்தியமாக அல்லது விட்டுவிட்டு பத்தியமாக நோய்குட்பட்டவராக இருந்தால் அவருடன் சேர்ந்து குடும்ப வாழ்க்கை நடத்த முடியாத நிலை இருப்பின், விவாகரத்து கோரலாம்.
(iv)தம்பதிகளில் ஒருவர் தீராத மிகக் கொடிய தொழுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறாரென்றால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.
(v) தம்பதிகளில் ஒருவர் மிக எளிதில் தொற்றிக்கொள்ளக் தக்க பால்வினை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறாரென்றால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.
(vi) தம்பதகளில் ஒருவர் மதம் காரணமாக சாமியாராகி இந்த உலகப்பற்றை துறந்து விட்டிருந்தால் மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.
(vii) தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் உயிருடன் உள்ளாரா இல்லையா என்ற செய்தி, அவர் உயிருடன் இருந்தால் நியாயமாக யார் யாருக்கு அவர் உயிருடன் இருப்பது தெரிய வேண்டுமோ அவர்களுக்கு தெரியாமல் இருக்கும் நிலையில் மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.
விவாகரத்து கோர மனைவிக்கு உள்ள சாதகமான அடிப்படைகள்:
திருமணத்திற்கு பிறகு கணவர் வன்புணர்ச்சி அல்லது ஓரினப் புணர்ச்சி அல்லது விலங்குப் புணர்ச்சி ஆகிய குற்றத்தைச் செய்தால். மனைவிக்கு 15 வயது பூர்ததியாகும் முன்னரே திருமணம் நடைபெற்று அவள் 18 வயதுக்கு முன்னரே அத்திருமணத்தை ஏற்கவில்லை எனில் மனைவி விவாகரத்து கோரலாம்.
2. பரஸ்பரமான ஒப்புதலின் பேரில் விவாகரத்து:
ஒரு திருமணத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற ஒரு மனுவினை கணவன், மனைவி ஆகிய இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு ஒன்றாக சேர்ந்து அவர்களுடைய மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யலாம். தாங்கள் இருவரும் ஒராண்டு அல்லது அதற்கும மேலான காலகாட்டத்திற்கு பிரிந்து தனித்தனியே வாழ்நது வருவதாகவும் தங்களால் ஒன்று சேர்ந்து வாழ இயலவில்லை என்றும், தங்களது திருமணம் கலைக்கப்பட வேண்டும் என்பதற்கு பரஸ்பரம் உடன்பட்டுள்ளதாகவும் காரணம் காட்டி, விவாகரத்து கோரலாம். உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி தற்போது ஒரே மாதத்திற்குள் விவாகரத்தை பெற்றுவிடலாம்.
வழக்கை தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் :
1. திருமண புகைப்படம்
2. திருமணம் பதிவு செய்திருந்தால் பதிவு சான்றிதழ்
3. அழைப்பிதழ்
4. இருவரின் பாஸ்போர்ட் புகைபடங்கள்
5. இருவரின் இருப்பிட ஆவணம் ( ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், வங்கி பாஸ் புக், பாஸ்போர்ட்)
3.செல்லாத திருமணம்:
அ) மணமக்கள் தடுக்கப்பட்ட உறவுமுறையில் இருக்கக் கூடாது ஆனால் அத்தகைய உறவுமுறையில் மணந்து கொள்ள அனுமதிக்கும் வழக்கமோ, வழக்காறோ அப்பகுதியில் இருந்தால் திருமணம் செய்து கொளளலாம்.
பி) எதிர்மனுதாரரின் ஆண்மையற்ற தன்மையால் திருமண பந்தம் முழுமையடையவில்லை என்றால் :
திருமணம் என்பது உடலுறவு கொண்டு குழந்தைகளை ஈன்றெடுத்து இனிது வாழ்வது. அப்பொழுதுதான் அத்திருமணமும் முழுமையடைகிறது. ஆண்மையற்ற தன்மை என்பது உடலுறவு கொள்ள முடியாமலும், குழந்தைகளை ஈன்றெடுக்க முடியாமலும் போவதாகும். ஒரு நபர் தனது திருமணத்தை முழுமையாக்க முடியாத அளவிற்கு அவனது உடல் அல்லது மனநிலை இருப்பின், அந்நபர் ஆண்மையற்று விளங்குகிறார் என் Digvijay Singh Vs. Pratap எனும் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.
Elizbeth Vs. Stanely எனும் வழக்கில் திருமணம் முடிந்து தமபதியினர் 4 இரவுகள் ஒன்றாக உறங்கிளனர். அதற்கு மேல் நான்கு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால் கணவன், தன்னுடைய மனைவியுடன் உடலுறவு எதுவும் கொள்ளவில்லை. இது அக்கணவனின் ஆண்மையற்ற தன்மையை காட்டுவதாகக் கூறி, மனைவி தொடுத்த வழக்கில் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
சி) திருமணம் ஆகும்போது மணமக்களில் ஏவரேனும் ஒருவர் அத்திருமணத்திற்கு சம்மதம் கூட கொடுக்க முடியாத அளவிற்கு பித்து மனநிலையில் இருக்கக்கூடாது. அவ்வாறு சம்மதம் கொடுத்தாலும் அவருக்கு மூளை கோளாறு காரணமாக திருமணம் செய்து கொள்ள தகுதியற்றவராகவோ, குழந்தை பெற்றெடுக்க தகுதியற்றவராகவோ இருக்க கூடாது. விட்டு விட்டு தாக்க கூடிய புத்தி சுவாதீனமின்மை நோய் இருக்க கூடாது.
4. குழந்தை பாரமரிப்பு யாருக்கு உள்ளது
5. காப்பாளர்
6. தத்தெடுத்தல்:
தத்தெடுக்கப்படத் தகுதிகள்:
1. தத்தெடுக்கப்டும் நபர் இந்துவாக இருக்க வேண்டும்.
2. ஏற்கனவே தத்தெடுக்கப்பட்டிருக்கக் கூடாது.
3. திருமணம் ஆகியிருக்கக்கூடாது. திருமணமானவர்களைத் தத்தெடுக்கும் வழக்கம் அல்லது வழக்காறு, சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே உண்டு என்றால் அவ்வாறு தத்தெடுத்துக் கொள்ளலாம்.
4. 15 வயது பூர்த்தியாகி இருக்கக்கூடாது. 15 வயதுக்கு மேற்பட்டவர்களை தத்தெடுக்க அனுமதிக்கும் வழக்கம் அல்லது வழக்காறு இருந்தால் அவ்வாறு தத்தெடுத்துக் கொள்ளலாம்.
தத்தெடுப்பிற்குண்டான பிற நிபந்தனைகள் :
ஒரு மகனைத் தத்தெடுப்பதென்றால், தத்தெடுக்கும் தந்தைகோ அல்லது தாய்க்கோ வேறு இந்து மகனோ அல்லது பேரனோ அல்லது கொள்ளுப் பேரனோ தத்தெடுக்கப்படும் காலத்தில் இருக்கக்கூடாது.
ஒரு மகளைத் தத்தெடுப்பதென்றால், தத்தெடுக்கும் தந்தைகோ அல்லது தாய்க்கோ வேறு இந்து மகளோ அல்லது மகளின் மகளோ தத்தெடுக்கப்படும் காலத்தில் இருக்கக்கூடாது.
தத்தெடுப்பவர் ஆணாகவும் தத்து எடுக்கப்பட வேண்டியவர் பெண்ணாகவும் இருந்தால், தத்து எடுக்கும் தந்தை, தத்து எடுக்கப்பட வேண்டிய பெண்ணை விட 21 வயது மூத்தவராக இருத்தல் வேண்டும்.
தத்து எடுப்பவர் பெண்ணாகவும தத்து எடுக்கப்பட வேண்டிய நபர் ஆணாகவும் இருந்தால், தத்து எடுக்கும தாய், தத்து எடுக்கப்பட வேண்டிய மகனைவிட 21 வயது மூத்தவராக இருக்க வேண்டும்.
ஒரே குழந்தையை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் ஒரே சமயத்தில் தத்தெடுக்கப்பட முடியாது.
ஒரு இந்து ஆண் தத்தெடுத்துக் கொள்ள தகுதி:
புத்தித் தெளிவோடு இருக்கின்ற, உரிமை வயது வந்த எந்த ஒரு இந்து ஆணும், ஒரு மகனையோ அல்லது மகளையோ தத்தெடுத்துக்கொள்ளலாம். மனைவி உயிரோடு இருந்தால், அவளுடைய ஒப்புதல் இல்லாமல் தத்தெடுக்க முடியாது. (1) மனைவி முழுமையாகவும், இறுதியாகவும் சன்யாசியாகி உலகப்பற்றை துறந்து விட்டாலோ அல்லது (2) இந்துவாக இல்லாமல் போய்விட்டாலோ அல்லது (3) தக்க அதிகார வரம்புடைய நீதிமன்றத்தால் புத்தி சுவாதீனமீன்மை என்று அறிவிக்கப்பட்டு விட்டாலோ மனைவியின் ஒப்புதல் இல்லாமல் தத்தெடுக்கலாம்.
தத்தெடுக்கும் காலத்தில் ஒருவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருந்தால் எல்லா மனைவியினரின் ஒப்புதலையும் பெற வேண்டியது அவசியம். எந்த ஒரு மனைவியினுடைய ஒப்புதலாவது அவசியமில்லை என்றால், மேற்கண்ட மூன்று காரணங்களில் ஏதேனும் ஒன்றை அம்மனைவியை பொறுத்தவரை காட்ட வேண்டும்.
ஒரு இந்து பெண் தத்தெடுத்துக் கொள்ள தகுதி:
புத்தித் தெளிவோடு இருக்கின்ற, உரிமை வயது அடைந்து விட்ட, திருமணமாகாத, திருமணம் ஆனாலும் (1) அத்திருமணம் கலைக்கப்பட்டு விட்டாலோ அல்லது (2) கணவன் இறந்து விட்டாலோ, அல்லது (3) கணவன் முழுமையாக மற்றும் இறுதியாக உலகப்பற்றை துறந்து விட்டாலோ அல்லது (4) இந்துவாக இல்லாமல் போய் விட்;டாலோ அல்லது (5) தக்க அதிகாரவரம்புடைய நீதிமன்றத்தால் கணவன் புத்தி சுவாதீனமுடையவன் என்று அறிவிக்கப்பட்டு விட்டாலோ, ஒரு பெண் தத்தெடுத்துக் கொள்ளலாம்.
தத்துக் கொடுக்கத் தகுதிகள்:
1. தந்தை அல்லது தாய் அல்லது காப்பாளர் தவிர வேறு எந்த நபருக்கும் ஒரு குழந்தையைத் தத்துக் கொடுக்கும தகுதி கிடையாது.
2. தந்தை உயிரோடு இருந்தால் அத்தகுதி அவருக்கு மட்டுமே உண்டு. ஆனால் அந்த உரிமையை மனைவியின் ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்தக்கூடாது. மனைவி முழுமையாக மற்றும் இறுதியாக சன்யாசியாக உலகப்பற்றை துறந்துவிட்டாலோ அல்லது இந்துவாக இல்லாமல் போய்விட்டாலோ அல்லது தக்க அதிகார வரம்புடைய நீதிமன்றம் அவளை புத்தி சுவாதீனமின்மைஃபித்து நிலையினள் என்று அறிவித்துவிட்டாலோ அக்கணவன் தனது மனைவியின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை.
3. தந்தை இறந்து விட்டாலோ அல்லது முழுமையாக மற்றும இறுதியாக சன்யாசியாகிவிட்டாலோ அல்லது அதிகார வரம்புடைய நீதிமன்றம் புத்தி சுவாதீனமின்மை, பித்து நிலையினள் என்று அறிவித்துவிட்டாலோ தாய் குழந்தையைத் தத்துக் கொடுக்கலாம்.
7. குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்
8. வரதட்சனை கொடுமை
9. இஸ்லாமிய விவாகரத்து சட்டம்
10. குழந்தை பார்ப்பதற்கான மனு
11. சீர்வரிசை மற்றும் நகைகளை திரும்ப பெறுவது
12. வழக்கை ஒரு நீதிமன்றத்திலிருந்து சொந்த ஊரில் அல்லது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள இன்னொரு நீதிமன்றத்திற்கு மாற்றுவது